Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாடியில் நின்றுகொண்டிருந்த வியாபாரி… வலிப்பு வந்ததால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் நின்று கொண்டிருந்த வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயக்கார தெருவில் செயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சோப்பு, வசிங்பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வலிப்பு நோய் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து ஜெயக்குமார் சம்பவத்தன்று மாடியில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரென வலிப்பு வந்து மயக்கமடைந்து மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் சிகிச்சை பலனிரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கேணிக்கரை காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |