Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “நீங்கள் பாராட்டு மழையில் நனைய கூடும்”…. எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்..!!

குடும்பத்திற்காக அயராது உழைக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் பாராட்டு மழையில் நனைய கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை மட்டும் தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் மட்டும் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அனுசரித்துச் செல்லுங்கள் எப்பொழுதுமே. தாய்வழி உறவினர்களிடம் சஞ்சலம் ஏற்படக்கூடும். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால் மட்டும் கவனமாக மேற்கொள்ளுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும்.

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற அதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும்  சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட மான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |