மன உறுதியும் தன்னம்பிக்கையும் தெய்வ பக்தியும் கொண்ட மீன ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். நேற்றைய பணி ஒன்றை இன்று துரிதமாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு வந்து சேரும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று மனக்கவலை மட்டும் கொஞ்சம் உண்டாகும். வீண் அலைச்சலும், அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகளில் நீங்கள் ஈடுபடலாம். கலைப் பொருட்களை விற்பனை தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் பொருட்களை கவனமாக எடுத்துச் செல்லுங்கள். உறவினர் வருகை இருக்கும்.
அதனால் செலவுகளும் இருக்கும். இன்று ஆதாயம் பெறுவதற்கு ஓரளவு அலைய வேண்டிய சூழலும் இருக்கும். இன்று நட்பு வட்டம் விரிவடையும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழலில் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற கூடும். இன்று சக மாணவர்களிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். பேசும்போதும் நிதானமாகப் பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை மேற்கொள்ளுங்கள். அனைத்து விதமான விஷயங்களும் சிறப்பாக நடக்கும். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள் எப்படி இருந்தது என்று நீங்களே சொல்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்