நிறைவேற்றியதாகக் கூறும் 202 வாக்குறுதிகளைப் பட்டியலிடுங்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் வாக்குறுதிகளில் எல்லாம்…. எதிர்பார்த்தது என்னமோ…. பசியோட இருக்கின்றார்கள் மக்கள்…. பொய் சொல்லி, வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆட்சிக்கு வந்து எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் சும்மா 202 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தங்கம் தென்னரசு வாய்கிழிய பேசுகிறார்.
உள்ளே பட்டிதொட்டி எல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறார்களே, வறுமையில் இருக்கிறார்களே அவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். அந்த கஷ்டமும் தெரியாமல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் என்று சொல்கிறார். என்ன 202 வாக்குறுதிகள் அந்த பட்டியலை வெளியிடுங்கள். அந்த பட்டியலை வெளியிடாமல் 202 வாக்குறுதிகள் என்றால் சும்மா மக்களை ஏமாற்றுகின்ற செயல் என விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர் இன்றைக்கு கஞ்சாவும் சரி, போதைப்பொருளும் சரி, சட்ட ஒழுங்கும் சரி ஒரு முழுமையான அளவிற்கு தமிழ்நாடே ஒரு அமைதி தவழ்ந்த மாநிலமாக அம்மாவுடைய ஆட்சியில் என்றைக்கு இருந்தது. முதலில் மக்கள் விரும்புவது அமைதி தவழ்கின்ற மாநிலத்தை தான். அதுவும் அண்ணா திமுக ஆட்சியில் தான். ஆனால் இப்போது அமைதியை கொலை செய்கின்ற… கொலை கொலையா முந்திரிக்கா நிறைய நிறைய சுத்தி வா என்ற மாதிரி கொலை கொலை தான் நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் காலத்தில் என்ன சொன்னார் ? ஒவ்வொரு ஊருக்கு போய் நீங்க யாரும் வந்து கேட்-ல காத்திருக்க தேவையில்லை. கோட்டையினுடைய வாயிற்கதவு எப்பொழுது திறந்திருக்கும். நேரடிய என்னுடைய அறைக்கு வரலாம் என்று சொன்னாரு. இப்போது போக முடியுமா ? மக்களை பொறுத்தவரையில் பிரச்சனையை தீர்க்க அரசு கிடையாது. எல்லாம் அவருடைய வெளிப்பாடுதான் முதலமைச்சர் முன்னாடி தீக்குளிக்கின்ற முயற்சிகள் எல்லாம். இப்படிப்பட்ட ஒரு அவல நிலை வந்து எந்த காலத்திலும் நடந்தது கிடையாது என கூறினார்.