Categories
தேசிய செய்திகள்

வாக்கிங் சென்ற 6 மாத கர்ப்பிணி… காரில் வந்த மர்ம கும்பலால்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் வசிக்கும் 21 வயதான பெண் ஒருவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று இரவில் கர்ப்பிணி வழக்கம்போல தனியாக வாக்கிங் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் அந்த பெண் பாட்னா ரயில் நிலையத்தில் அழுதபடி அமர்ந்து இருந்தார். இதை கவனித்த சில பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |