Categories
அரசியல்

420 அரசாக இருக்குது…. !  ”120நாளில் தெரியுது”….  இது ஸ்டாலினுக்கு அழகா ?  மாஜி அமைச்சர் கடும் தாக்கு …!!

இது 420 அரசு என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு அரசு பொறுப்பேற்றால் அந்த அரசின் ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கு ஒரு ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் ஆகும். அவர்களது நடவடிக்கையிலும், செய்திருக்கின்ற திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்து, அதனால் மக்களுடைய மனநிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஓராண்டு காலம் ஆகும்.

ஆனால் நாம் 50 ஆண்டுகாலம்…. இந்த அக்டோபர் 17 வந்தால் இந்த கட்சியினுடைய 50வது ஆண்டு தொடக்க விழாவை நடத்தவுள்ளோம். 32 ஆண்டு காலம் ஆட்சி கட்டலில் நாம் இருந்திருக்கிறோம். நமக்கு தெரியும். பல்வேறு நிலையிலும் தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்… எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறோம்… ஆளுங்கட்சியாக இருந்து இருக்கிறோம் மக்களுடைய மனநிலை நமக்கு நன்றாக தெரியும்.

ஆனால் இன்றைக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு குறுகிய காலத்திலேயே…. இந்த நான்கு மாத காலத்திலேயே 120 நாட்களுக்கு உள்ளாகவே மக்களுடைய எதிர்ப்பை, அதிருப்தியை சம்பாதித்து இருக்கின்ற ஒரே அரசு ஸ்டாலின் அரசு. அதிருப்தியை மட்டுமல்ல மக்களை ஏமாற்றி இருக்கிறது, வஞ்சித்து இருக்கின்றது. சட்டபூர்வமாக சொல்ல வேண்டும் என்றால் மக்களை ஏமாற்றி உள்ளது. இந்த அரசு என்பது 420 அரசு,  மக்களை ஏமாற்றுகின்ற அரசு. 2, 3 திட்டத்தை அறிவித்துவிட்டு எல்லாம் செய்த மாதிரி சொல்லுவது முதல்வருக்கு அழகா ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |