Categories
அரசியல்

அமைச்சருக்கு இந்த மாவட்டம் தான் … ரொம்ப வேதனையா இருக்கு…. புலம்பிய எடப்பாடி பழனிசாமி…!!

மக்களுடைய எண்ணங்களை புரிந்து அதற்கு ஏற்றவாறு நாங்கள் சேவை செய்தோம் என தமிழக முன்னாள் முதல்வர் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உணவு தானிய உற்பத்தி இந்தியாவிலேயே 100 லட்சம் மெட்ரிக் டன் மேலாக தொடர்ந்து தேசிய விருதை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. கிருஷ்கர்மா என்ற விருதை நம் தொடர்ந்து பெற்றோம். இதெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பட்ட நன்மைகள். நந்தன் கால்வாய் திட்டம் நம்முடைய அமைச்சர் சகோதரர் சிவி சண்முகம் எப்ப பார்த்தாலும் சொன்னார் அதையும் நம்ம தான் பண்ணோம். வீடூர் அணை தூர்வார வரும்பொழுது நடவடிக்கை எடுத்தோம். இன்னும் பல திட்டங்கள் அம்மாவுடைய அரசு மக்களுடைய அரசு.

மக்களுடைய எண்ணங்களை புரிந்து அதற்கு ஏற்றவாறு நாங்கள் சேவை செய்தோம். அதற்கு மேலாக இந்த பகுதி ஒரு பின்தங்கிய பகுதி, பின் தங்கிய மாவட்டம். இந்த பின்தங்கிய மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக மண்ணின் மைந்தர் அப்பொழுது அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சிவி சண்முகம் அவர்கள் என்னிடத்திலேயே தொடர்ந்து வற்புறுத்தினார்.

இந்த பகுதியில் விவசாயிகள் அதிகமாக இருக்கின்றார்கள், ஏழை தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும், ஆராய்ச்சி கல்வி படிக்க வேண்டும். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக வெளியில் சென்று படிக்க முடியாத நிலை. இந்த பகுதியிலேயே…. இந்த விழுப்புரம் மாவட்டத்திலேயே ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கித் தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

அவரும் சட்டப்பேரவை உறுப்பினரும் அவருடன் சேர்ந்து கோரிக்கை வைத்தார். அதனுடைய கோரிக்கையை ஏற்று மாண்புமிகு அம்மாவின் அரசு நான் முதலமைச்சராக இருந்தபொழுது விழுப்புரம் மாவட்டத்திலேயே மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருநாமத்தின் பெயரிலேயே புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்து ஆளுநரிடத்திலே அனுமதியைப் பெற்று இந்த பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரையும் நியமிக்கப்பட்டு சிண்டிகேட் மெம்பரையும் நியமிக்கப்பட்டு துவங்குகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும். இந்த பின்தங்கிய மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர்கள், மாணவர்கள் உயர்ந்த நிலையில் வர வேண்டும் அதற்காக கொண்டு வந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதுதான் ஒரு அரசிற்கு அழகு. அதுதான் சிறந்த அரசு. அதற்கு மாறாக இங்கே இருக்கின்ற உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர். இதுதான் வேதனைக்குரியது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சரும் தன்னுடைய மாவட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக திட்டத்தை கொண்டு வருவார்.

ஆனால் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர் உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கின்றவர். இங்கே இருக்கின்ற இந்த பல்கலைக் கழகத்தை அருகாமையில் இருக்கின்ற அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைக்க வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய பெருமை இந்த மாவட்ட அமைச்சருக்கு தான் சாரும். எந்த அளவு மக்கள் மேல் அக்கறை கொண்டிருக்கிறார்கள். எந்த அளவு மாணவர்கள் மீது அக்கறை கொண்டு இருக்கிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு அமைச்சரும் மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அந்த திட்டத்தையே வேறு மாவட்டத்திற்கு அளிக்கக்கூடிய ஒரே அமைச்சர் இந்த மாவட்ட அமைச்சர் தான் என எடப்பாடி விமர்சித்தார்.

Categories

Tech |