திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிய விஷயங்களை நிறைவேற்றாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அது சின்ன பசங்க சொப்பு வைத்து விளையாடும்போது என்ன பண்ணுவார்கள் என்றால் ஆசை, தோசை, அப்பளம், வடை என்று சொல்வார்கள். அதே மாதிரி இன்று தேர்தல் வாக்குறுதிகள் ஆகிவிட்டது. ஆசை, தோசை, அப்பளம், வடை மாதிரி எதிர்பார்த்தது கிட்டத்தட்ட பெண்கள்.
இல்லத்தரசி ஆயிரம் ரூபாய், அது கொடுக்கவில்லை, மாதந்தோறும் முதியவர்களுக்கு 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் அதை கொடுக்கவில்லை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கினாலும் ரத்து அதுவும் கொடுக்கவில்லை, ஒவ்வொரு சிலிண்டருக்கும் 100 ரூபாய் மானியம் அதுவும் கொடுக்கவில்லை.
பெட்ரோல், டீசல் விலை ஐந்து ரூபாய் குறைப்போம் என்று சொல்லி 3 ரூபாய் என்னமோ குறைத்திருக்கிறார்கள், டீசல் விலை 4 ரூபாய் குறைப்போம் என்று அப்படியே விட்டுவிட்டார்கள். நீட்டை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே ரத்து செய்து விடுவோம், அதான் முதல் வேலை என்றார்கள். நீட்டுக்கு நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அது அயோக்கியத்தனம், இவர்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அது நல்லது.
நீட் வந்து ஆட்சிக்கு வந்த உடனே நாங்கள் கையெழுத்து போட்டு முதல் வேலை நீட்டையே வர விடமாட்டோம் என்று சொன்னார்கள். அது வந்துவிட்டது, மாணவர்ககளை படிக்க விடாமல் செய்தது, அதன் காரணமாக மூன்று மாணவ – மாணவிகள் இறந்தது யார் பொறுப்பு ? இந்த அரசாங்கம் தான் முழுப் பொறுப்பு அதற்கு திமுக தான் முதல் பொறுப்பு என விமர்சித்தார்.