தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் நான்கு வாரகாலம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி வழக்கறிஞர்கள் ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு நான்கு வார கால அவகாசம் கோரியுள்ளது.
மகாராஷ்டிரா , ஹரியானா மாநிலத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப் பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்த போதுமான இயந்திரங்கள் இல்லை என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.இரண்டு மாநில தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்ததால் தான் நவம்பர் மூன்றாவது வாரத்திற்கு பின்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வர முடியும் எனவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 30-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் தற்போது நவம்பர் மாதம் இறுதி வரை தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.