அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றும், அரசியலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகன், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல உதயநிதி ஸ்டாலின். ஓபிஎஸ் என் மகன் 39 வயதில் எம்பி, சசிகலாவின் அக்கா மகன் 38 வயதில் எம்பி, ஜெயக்குமாரின் மகன் 27 வயதில் எம்பி இவர்களுக்கெல்லாம் தகுதி வாரிசு என்பதை விட என்ன தகுதி இருந்தது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் கழக பணிகளுக்கு பின் 42 வயதில் எம்எல்ஏவாக மக்களால் அமோகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது? உதயநிதியின் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நல்ல அவர் உங்களைப் போன்று கொலை குற்றவாளியாக அரசியலில் நுழைந்தவர் கிடையாது. எதிர்கால தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை எங்கள் கழக நம்பிக்கை சுடரொளி அவர். ஒரே ஒரு செங்கலால் மத்திய அரசுக்கும், மாநிலத்தில் அதற்கு கூழை கும்பிடு போட்ட கட்சிக்கும் மரண அடி கொடுத்தவர்” என்று பேசியுள்ளார்.