தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.