Categories
மாநில செய்திகள்

“வருமுன் காப்போம் திட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்….!!!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் 110 அறிவிப்புகள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் ஒரு ஆண்டிற்க்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் அறுவை சிகிச்சை மருத்துவர், உடல் நோய் மருத்துவர்கள், கண் மற்றும் காது மருத்துவர் போன்ற 16 சிறப்பு மருத்துவர்கள் மூலம் மக்களுக்கு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் முதற்கட்ட பணியாக இன்று முதல்வர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆத்தூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் மற்றும் விசைத்தறி சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Categories

Tech |