Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

போட்டி தலைப்புகள் போட்டி நடைபெறும் நாள் அன்று அறிவிக்கப் படும். பள்ளி போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும். அதில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |