மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
Soulful Music Director #KarthikRaja’s #Pisasu2 First Single #UravinPaatu #உறவின்பாட்டு from October 2nd, Music 🎼 on @saregamasouth 🎶@DirectorMysskin @andrea_jeremiah @Lv_Sri @shamna_kkasim @Actorsanthosh pic.twitter.com/YT8dYKDDw4
— RockFort Entertainment (@Rockfortent) September 28, 2021
ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிசாசு-2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்ற ‘உறவின் பாட்டு’ என்கிற பாடல் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.