அழுகிய காய்கறிகளுக்கு நடுவில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலையில் காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தலையில் மூட்டைகளை சுமந்து கொண்டு 2 பேர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது காவல்துறையினரை கண்டதும் அதை கிழே போட்டுவிட்டு தப்பி செய்துள்ளனர். இதனை பார்த்து காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அதன்பின் அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் அழகிய காய்கறிகளுக்கு இடையே மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் மொத்தமாக 92 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் மதுபாட்டில்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மது பாட்டில்களை கைப்பற்றிய காவல்துறையினர் தப்பிச் சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.