உத்திரபிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டு அவரை கொலை செய்த காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரனியா என்ற பகுதியின் அருகே பகவத் ஷரன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளன.ர் திடீரென்று அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார். இதை அறிந்த காதலன் சிறுமிக்கு கருக்கலைப்பு மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால் கருக் கலையாததால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி அவரை வற்புறுத்தி உள்ளார். இதனால் சிறுமியைத் தனியாக வரச்சொன்ன காதலன் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.