ஜெயலலிதாவைப் போல முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்..
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் என இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்தது.. இந்த ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.. தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவைப் போல முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.