Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

100 ஆண்டுகள் பழமை…. மாற்று இடத்தில் நடப்பட்ட மரம்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 100 ஆண்டுகள் பழமையான மரம் மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடக்கும் இடங்கள் மற்றும் குறுகிய இடங்கள் கண்டறியப்பட்டு, தற்போது அந்த பகுதிகளில் சாலையை விரிவுபடுத்தும் பணி சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக அந்த பகுதிகளில் உள்ள புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தை சாலை விரிவாக்கத்தின் போது அகற்ற வேண்டியிருந்தது. இதனையடுத்து அந்த மரத்தின் கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மரத்தின் அடிப்பகுதியை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரான சேதுபதி மற்றும் சக அதிகாரிகள் சேர்ந்து எந்திரங்கள் மூலம்  அரசின் ஒப்புதலோடு அந்த மரத்தை வேரோடு அகற்றி  ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு லாரி மூலம் கொண்டு  சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த மரமானது கொள்ளிடத்தின் கரை பகுதியில் நடப்பட்டது.

Categories

Tech |