Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு மிக பெரிய ஆபத்து….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

இந்தியாவில் அனல் மின் நிலையம் உற்பத்தி திறனை 64 ஜிகா வாட்டாக அதிகரிப்பதற்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சி40 நகரங்கள் அமைப்பு என்பது ‘காற்று மாசில்  இருந்து மக்களின் உயிரை காப்பதற்கான வழி ‘என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் அனல் மின்நிலையத்தின் ஏற்படும் காற்று மாசின் விளைவாக ஒரு வருடத்தில் உயிரிழப்புகள் தற்போதைய நிலையில்  இருமடங்காக அதிகரிக்கும். அதனைப்போல அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட 60% அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் புதிய அனல்மின் திட்டங்களை செயல்படுத்துவதால் உடல்நலக்குறைவால் எடுத்துக்கொள்ளப்படும் விடுப்பு   நாட்கள் 2022ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 22 லட்சமாக இருக்கும் என அறிக்கையில் எச்சரிக்கைப்படுகிறது. இதையடுத்து நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக சி40 நகரங்களை விட சென்னை நகர மக்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அனல்  மின் நிலையத்தில் இருந்து எரிக்கபடும் நிலக்கரி மின் உற்பத்தி செய்யப்படும் போது வெளியாகும் காற்று மாசுபாடு நீண்ட தொலைவு வரை சென்று அனைவருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

இதனால் விளிம்பு நிலையில் வசிக்கும் இளைஞர்கள், முதியோர் மற்றும் கருவுற்ற பெண்கள் ஆகியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் உடல்நல குறைவால் செய்யப்படும் செலவினங்கள் 2020- 2030 ஆம் ஆண்டில் 5.9 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே புதுப்பிக்கத்தக்க மின் சக்திக்கு மாறுவது, சென்னையில் மலிவான விலையில் மின்சாரம் விநியோகம் செய்ய வழி வகுப்பதோடு மட்டுமில்லாமல் சென்னையைச் சுற்றி மட்டும் 2020-2030 ஆண்டு காலகட்டத்தில் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை மின்னுற்பத்தி, உபகரணங்களை பொருத்துதல் போன்ற துறைகளில் உருவாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |