Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வைரலாகும் போட்டோ…. கடமையை செய்த பணியாளர்கள்…. கலெக்டரின் செயல்….!!

பணியாளர்களுடன் கலெக்டர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாங்குவதை நேரில் பார்த்துள்ளார். இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் எல்லோரும் குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளரிடம் தினமும் வழங்கி வருவதை அறிந்த அவர் பொதுமக்களை பாராட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து குப்பைகளை தரம் பிரித்து வாங்கி அதனை வாகனங்களின் மூலமாக எடுத்து சென்ற தூய்மைப் பணியாளர்களான  இந்திராணி, கலா மற்றும் சுப்பிரமணி ஆகியோருடன் கலெக்டர் செல்பி எடுத்துள்ளார். மேலும் கலெக்டரின் இந்த செயல் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |