Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 LEAGUE : களமிறங்குகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ்..!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் டி10 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளார்.

அபுதாபியில் நடத்தப்படும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல முன்னாள் வீரர்களும் களமிறங்குகின்றனர்.

Image result for Former India all-rounder Yuvraj Singh is set to join the T-10 cricket series.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி மன்னரான யுவராஜ் சிங் தற்போது இந்தத் தொடரில் மராத்தா அரபியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இலங்கையின் லசித் மலிங்கா, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.

Image result for Former India all-rounder Yuvraj Singh is set to join the T-10 cricket series.

முன்னதாக யுவராஜ் சிங் தனது ஓய்வுக்குப்பின் குளோபல் கனடா டி20 தொடரில் பங்கேற்றிருந்தர். தற்போது மீண்டும் இந்த டி10 தொடரில் அவர் களமிறங்கவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |