மஹாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் போட்டியிட்ட அதே தொகுதியில் அவரது இளைய மகன் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியை நோட்டா பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எஸ்சி எஸ்டி வாக்குகள் அதிகம் உள்ள லத்தூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மரணமடைந்த நிலையில், அவரது இளைய மகன் தீரஷ் தேஷ்முக் அதே தந்தை நின்ற அதே தொகுதியில் நின்று 67.63 வாக்கு சதவிகிதமும் மொத்தம் 1,34,615 வாக்குகள் பெற்று, 1,04,425 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
அதே தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கூட்டணியின் சிவசேனா வேட்பாளர் 13.79 வாக்கு சதவீகிதத்துடன் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். தீரஷ் க்கு அடுத்த நிலையில் வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. இதற்கு முன்பாக மஹாராஷ்ட்ரா உள்ளாட்சி தேர்தலில் ஏகுர்கா பகுதியில் போட்டியிட்டு தலைவரானார். இந்நிலையில் தீரஜ் முதன்முறையாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிலும் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.