Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த ஊழியர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழந்தன்னிப்பட்டி பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வேலையை முடித்துவிட்டு கருங்கல்பாளையம் காவிரி கரை வெற்றி நகர் விரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மணிகண்டனிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மணிகண்டன் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் வசிக்கும் லோகநாதன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |