Categories
தேசிய செய்திகள்

மக்களே… ஊசி போடப் போகும்போது உஷாரா இருங்க… தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி…!!!

கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இளைஞருக்கு கொரோனா ஊசிக்கு பதில், வெறிநாய்க்கடி ஊசி செலுத்திய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெறிநாய்க்கடி ஊசி செலுத்திக் கொள்வோருக்கான வரிசையில் தவறுதலாக அமர்ந்த இளைஞர் ராஜ்குமாருக்கு மருத்துவ அட்டையை சரிபார்க்காமல் வெறிநாய்க்கடி ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தவறுதலாக தடுப்பூசி செலுத்தியவர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவ குறிப்புக்களை பார்க்காமலேயே தடுப்பூசி போட்ட செவிலியர் கீர்த்தி மற்றும் தடுப்பூசி மையத்தில் பொறுப்பில் இருந்த மருத்துவர் ராக்கிதாவ்டே ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |