Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 50% மாணவர்கள் சுழற்சி முறையில் முறையில் வருகை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது சற்றே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூரில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வகுப்பிலுள்ள மாணவிகளுக்கு பரிசோதனை நடத்தியதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனே அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி மூடப்பட்டது. இதனால் அந்த பள்ளிக்கு   அக்டோபர் 3ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |