குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊதிய உயர்வு உயர் மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ பணியிடங்களை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி,
கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறி போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தார். ஆனால் அவர் கூறியபடி, இன்றளவு வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாதன் காரணமாக இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் ஈடுபட உள்ளனர். மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் சூழலில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.