Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60…. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க முடியாது…. ஐகோர்ட் அதிரடி!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பு என மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை ஏற்காத உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் முழுமையான விவரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறிய  நீதிபதிகள் மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், 2 ஆண்டுக்கு நீதிமன்ற அனுமதியின்றி மனுத்தாக்கல் செய்யவும் தடை விதித்துள்ளனர்.

Categories

Tech |