Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்வு பெற்றோர் நல அமைப்பினர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சாலையில் அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இணைச் செயலாளர் நடராஜன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பொது செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். அதில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 195 சதவீத அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் கூறினர்.

இதனையடுத்து விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் எனவும், பணியில் இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறினர். இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஓய்வூதியம் வழங்க வேண்டிய பங்கு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |