Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பு கம்பியின் மீது மோதிய லாரி…. நடைபெற்ற மீட்பு பணி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ரயில்வே நுழைவு பாலம் தடுப்புக் கம்பியில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையத்தில் இருந்து சோலார் செல்லும் சாலையில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் பாலத்திற்கு சிறிது தூரத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்வே நுழைவு பாலம் சேதமடைவது தடுக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி காகித பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி நுழைவு பாலத்தை கடக்க முயன்ற போது தடுப்பு கம்பியின் மீது மோதியது.

இதில் லாரியின் மீது தடுப்பு கம்பி உடைந்து விழுந்தது. இதனால் டிரைவர் லாரியை மேற்கொண்டு இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்திவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது தடுப்புக் கம்பி அப்புறப்படுத்தப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இதனையடுத்து ரெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சோலார் பகுதிக்கு செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே தடுப்புக் கம்பியில் லாரி மோதியதால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் கோணவாய்க்கால் வழியாக சுற்றி சென்றனர்.

Categories

Tech |