தேசிய மனித உரிமைகள் ஆணையம், தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது. இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை அகற்றும் போது, மனித கழிவுகளை அள்ளும் போது மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் நிகழ்வானது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அருள்குமார் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மத்திய மாநில அரசுகள் அனைத்தும் மனித கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மரணம் அடைந்தால் அந்த மரணத்திற்கு அவர்களே பொறுப்பாகும். மேலும் அவர்களை முன் களப்பணியாளர்கள் என அறிவித்து, கூடுதல் சலுகைகளையும் வழங்க வேண்டும்.
மேலும் அவர்களுக்கு தேவையான கையுறைகள், தலைக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுருந்தது. மேலும் அனைத்துத் துறைகளுக்கும், மாநில தலைமை செயலர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையமானது இக்கடிதத்தை அனுப்பியுள்ளது.