Categories
உலக செய்திகள்

மீண்டும் மன்னர் ஆட்சி…. பின்பற்றப்படும் கொள்கைகள்…. தகவல் வெளியிட்ட தலீபான் அரசு….!!

மீண்டும் மன்னர் ஆட்சியை பின்பற்ற உள்ளதாக தலீபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை முழுவதும் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை நீக்கிவிட்டு தலீபான்கள்  புதிய இடைக்கால அரசை அமுல்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஆண்களை மட்டுமே கொண்ட மந்திரி சபை  அறிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு அதில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில்  ஆப்கானிஸ்தான் நாட்டில் மன்னர்கள் அரசியலமைப்பு கொள்கைகளை பின்பற்ற உள்ளதாக தலிபான்கள் அரசின்  நீதித்துறை மந்திரி அப்துல் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தான் நாட்டை கடைசி முறை ஆண்ட மன்னர் முகமது ஜாஹிர் ஷாவின் காலத்தில் இருந்த அரசியல் அமைப்பு கொள்கைகளை தற்போது பின்பற்ற உள்ளோம்” எனக் கூறியுள்ளார். மேலும் மன்னர் முகமது ஜாஹிர் ஷா 1933 -1973 வரை ஆட்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் தலீபான் அரசின் கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மந்திரியான சபியுல்லா முஜாஹித் அடுத்த வருடம் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு ஆணையம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |