பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஊடகங்கள் குறித்தும், செய்தியாளர்கள் குறித்தும் தவறான வார்த்தை கூறியதையடுத்து பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்யும் படியும் கண்டனம் வலுத்து வந்தது. இந்நிலையில் காரைக்குடியில் ஹெச்.ராஜாவின் 64வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், ருத்ரதாண்டவம் திரைப்படமானது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்.
இதில் யார் மீதும் மத ரீதியான தாக்குதல் கிடையாது. ஒருவர் மதம் மாறிவிட்டால் பட்டியலின மக்கள் பெரும் சலுகைகளை பெற முடியாது என்பதை சட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தை எதுவும் நான் பயன்படுத்தவில்லை. அமைச்சர் வி.கே சிங்கும் இதே வார்த்தை தான் பயன்படுத்தியுள்ளார்.
அர்த்தம் தெரியாமல் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் இது வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை கிடையாது என்பதற்கு விளக்கம் விக்கிபீடியாவில் விளக்கம் இருக்கிறது. ஜனநாய உரிமைகளுக்காகவும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவன் நான்தான்” என்று என்று பேசியுள்ளார்.