எம்.ஜி.ஆரை சீண்டினால் நெருப்போடு விளையாடுவது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு பேருந்து நிலையத்தில் எல்லாம் பார்த்தால் யாருடைய முகமும் கிடையாது. ஒரே ஒரு முகம் பார்க்கலாம் அது திமுக தலைவர் முதலமைச்சர் திரு ஸ்டாலின் முகம் தான். எங்க பார்த்தாலும் சரி, இந்த அரசு செய்கின்ற சாதனை என்பதே பஸ் பேருந்து நிலையத்தில் விளம்பர பலகையில் வைத்து தான் அரசு செய்த சாதனையாக இருக்கிறது. நானே ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி அவரு படத்தை தான் வைத்துள்ளார்கள். அந்த ஒரே நடிகர் அந்த நடிகரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வைகோ பற்றி சொன்னதற்கு வைகோபதில் சொல்லிட்டோம், ஆனால் புரட்சித்தலைவரை சீண்டினால் நெருப்போடு விளையாடுவதுபோல், அது எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் புத்தக வெளியீட்டு விழா அந்த புத்தக வெளியீட்டு விழா யுனிவர்சிட்டியில் அதன் வேந்தராக இருக்கக்கூடிய திரு விஸ்வநாதன் எழுதி அந்த புத்தக வெளியீட்டு விழா பன்வாரிலால் ப்ரோகித் தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருக்கும் போது வெளியிடுகிறார்கள்.
அந்தப் புத்தகத்தின் உடைய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, நான் என்றென்றைக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் பட்டவன் என்று சொல்லிவிட்டு…. என்னை படிக்க வைத்தது,, சட்டமன்றத்தில் நான் வந்து மயக்கம் போட்டு விழுந்ததும் என்னை மடியில் வைத்து என்னை மருத்துவமனையில் அனுமதித்து என் உயிரினை காப்பாற்றியது…. அது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளில் எனக்கு உதவி செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று சொல்லி…. என்றைக்கும் நன்றி கடன் பட்டிருப்பேன் என்று சொல்லிவிட்டு இந்த வார்த்தை சொல்கிறார் என துரைமுருகனை விமர்சித்தார்.