Categories
அரசியல்

விமர்சிக்காதீங்க…! ஐயப்பன் மீது ஆணையா…. இதில் தூசி கூட தவறு நடக்காது…. அமைச்சர் சேகர் பாபு…!!!

கோயில் நகைகளை தங்க கட்டியாக மாற்றும் விவகாரத்தில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சே சேகர் பாபு,  இறைவனுடைய பயன்பாட்டிற்கு தேவையான நகைகளை எந்த வகையிலும் உருக்குவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள நகைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவை எதையும் நாம் தொடக்கூட இல்லை. நகைகளை பிரித்து அந்த பிரிக்கப்படுகின்றன நகைகளை முழுவதுமாக வீடியோ செய்கிறோம்.

நீதிபதிகள், நம்முடைய துறை சார்ந்த அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் ஆகியோர் இணைந்து முழுவதுமாக அதை வீடியோ பதிவு செய்கிறோம். அதன் பிறகு அந்த நகைகளை தமிழக அரசுக்கு சொந்தமான மும்பையில் இருக்கின்ற நிறுவனத்திடம் கொடுத்து 24 காரட் தங்கமாக மாற்றுகிறோம். அந்த தங்க பிஸ்கட்டுகளை கோல்டு பான் ஸ்கீம் வைப்பு நிதியில் வைத்து அதற்கு பெறப்படுகின்ற வட்டி தொகையை திருக்கோயில் திருப்பணிகளுக்கு செலவிட இருக்கிறோம்.

இதில் எந்தவிதமான உள்நோக்கமும் தயவுசெய்து கற்பிக்காதீர்கள். இது முழுக்க முழுக்க இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. திருக்கோவிலுக்கு பயன்படுகிற இந்த திட்டத்தை தயவுசெய்து விமர்சனங்கள் செய்யாதீர்கள். இந்த மண்ணில் இருக்கின்ற தூசி அளவு கூட நிச்சயம் தவறு நடக்காது என்று ஐயப்பன் மீது ஆணையிட்டு சொல்கிறேன். தவறு நடப்பதற்கு நானும், துறைசார்ந்த அதிகாரிகளும் இடம் தரமாட்டோம். நீதிபதிகளும் இடம் தரமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |