தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூ ரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.