பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் நடித்துள்ள ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இதை தொடர்ந்து இவர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Unveiling the first look of #ThinkOriginals next #SemmaBodha 🥂 ft @iamSandy_Off !
An @ofrooooo hangover!
Directed by @i_karthiik
🎤 @ofrooooo @HydeKarty
✍️ #Sago @HydeKarty @dop_harish @Sridevistylist @AttiCulture @wimvasu @ethicalsoulfilm pic.twitter.com/PojyqxFO0m— Think Music (@thinkmusicindia) September 29, 2021
மேலும் சாண்டி குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது சாண்டி ‘செம்ம போத’ என்கிற ஆல்பம் பாடலுக்கு நடன இயக்கம் செய்ததோடு அவரே நடித்துள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இந்த பாடலுக்கு ஓப்ரா இசையமைத்துள்ளார். இந்நிலையில் செம்ம போத பாடலின் கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடல் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.