நலன் குமாரசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் நலன் குமாரசாமி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நலன் குமாரசாமியின் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி, அரண்மனை-3 ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.