NGK படத்தில் இடம்பெற்ற அன்பே பேரன்பே பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக இருக்கிறது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
Mesmerising #AnbaePeranbae Hits 125 M+ Views.. #NGK @Suriya_offl @Rakulpreet @thisisysr @shreyaghoshal @sidsriram #Umadevi @sivakvijayan @Cinemainmygenes @selvaraghavan @SonyMusicSouth @RelianceEnt #AnbaePeranbaehits125Mviews pic.twitter.com/nHAF2xQ8Fx
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 29, 2021
இதையடுத்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தில் இடம்பெற்ற ‘அன்பே பேரன்பே’ பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.