படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியுள்ளது.
இதையடுத்து ‘அசுரன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். அதன்படி தெலுங்கு பதிப்பில் நடிகர் வெங்கடேஷ், தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக, வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஆடாவாரி மாட்லாகு அர்தாலே வேறுலே’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்தார். இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் சூப்பர் ஹிட் படத்தில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.