தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 100% வெற்றி பெறும் என்றும், கூட்டணியில் போதிய இடம் கிடைக்காது என்ற வருத்தம் இருக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குரோம்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கே.எஸ் அழகிரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய போது, கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்காது என்ற வருத்தம் இருக்கும். களத்தில் இறங்கி வேலை செய்தால் அனைத்து வருத்தங்களும் மறந்து போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.