பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் மாஸ்டர் பட பிரபலம் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் இந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் சந்தோஷ் பிரதப் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சிபி சந்திரன் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபி சந்திரன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.