முன்னதாக விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் இன்று வெளியாகியுள்ள நிலையில், இரு படங்களுக்குமே அந்தந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனிடையே கைதி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கைதி நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுக்கும்’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு ட்விட்டர் வாடிக்கையாளர் ஒருவர் ‘அப்படியெல்லாம் ஒரு ம**ம் இல்ல’ என தகாத வார்த்தையைப் பயன்படுத்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவின் பக்கத்தில் பதிலிட்டிருந்தார்.
இதற்கு மறுபதிவு செய்துள்ள எஸ்.ஆர். பிரபு, ‘அப்புறம் என்ன மயிருக்கு என் டைம்லைன்ல கமெண்ட் பண்ணுறீங்க ப்ரோ? ‘ என அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தப் பதிவுக்கு பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அந்த இளைஞர் அவரது ட்விட்டர் கணக்கை யாரும் பார்க்காதபடி தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளார்.
#Kaithi have got all the fun u will expect!! 💥🔥 pic.twitter.com/CwATuQc7vk
— SR Prabu (@prabhu_sr) October 23, 2019