உத்திரபிரதேசத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ஒரு வயதான நபரிடம் மங்கள், சோனு மற்றும் அனுஜ் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 28 ம் தேதி அன்று அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதில் மங்கள் மற்றும் சோனாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு பைக் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.