Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த மனைவி….. இறப்பிலும் இணைபிரியா தம்பதியினர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  நிலா என்ற கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் ராமசாமியின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். அப்போது தனது கணவரின் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த ராமாயி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார்.  இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தம்பதியினரை ஒரே இடத்தில் அடக்கம் செய்துவிட்டனர்.

Categories

Tech |