பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘பிரதான் மந்திரி போஷன் சக்தி அபியான்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 11 லட்சம் பள்ளி செல்லும் மாணவர்கள் பயன் பெறுவர் என்று தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து மத்திய மந்திரி பியூஸ் கோயல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ” அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில் ஈசிஜிசி பட்டியலிடலாம் என்று நான் நம்புகிறேன். சீனாவிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதற்கான வழி குறைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி எந்த முடிவு மத்திய அரசு எடுக்கவில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் . மேலும் வதந்தி பரப்புவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.