Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 30…!!

செப்டம்பர் 30  கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார்.

1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது.

1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர்.

1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது.

1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.

1935 – அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை செருமனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியம், செக்கோசிலவாக்கியா ஆகியன இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.

1938 – “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது உலக நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் நாடுகடந்த அரசின் பிரதமராக விளாதிசுலாவ் சிக்கோர்ஸ்கி தெரிவு செய்யப்பட்டார்.

1945 – இங்கிலாந்தில் எர்ட்ஃபோர்ட்சயர் தொடருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

1946 – இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நேரடித் தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1947 – பாக்கித்தான் ஐநாவில் இணைந்தது.

1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு செருமனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.

1950 – இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1954 – ஐக்கிய அமெரிக்கா நாட்டிலசு என்ற உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை சேவைக்கு விட்டது.

1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.

1966 – பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது.

1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1980 – ஈதர்நெட் விவரக்கூற்றுகள் வெளியிடப்பட்டன.

1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.

1995 – தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1999 – சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.

2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

2005 – சர்ச்சைக்குரிய யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியானது.

2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.

2008 – ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர்.

2009 – சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.

2016 – ஆம்ஸ்டர்டம் அருங்காட்சியகத்தில் இருந்து 2002 டிசம்பர் 2 இல் திருடப்பட்ட வின்சென்ட் வான் கோவின் $100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஓவியங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

இன்றைய தின பிறப்புகள்

1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273)

1550 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631)

1864 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1937)

1870 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1942)

1900 – எம். சி. சாக்ளா, இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 1981)

1913 – ஆர். ராமநாதன் செட்டியார், தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1995)

1922 – இருசிகேசு முகர்ச்சி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2006)

1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2016)

1931 – எம். ஏ. எம். ராமசாமி, தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)

1941 – கமலேஷ் சர்மா, பொதுநலவாய நாடுகளின் 5வது பொதுச் செயலாளர்

1964 – மோனிக்கா பெலூச்சி, இத்தாலிய நடிகை

1966 – சங்கர் பாலசுப்பிரமணியன், இந்திய-பிரித்தானிய வேதியியலாளர்

1980 – மார்டினா ஹிங்கிஸ், சுவிட்சர்லாந்து டென்னிசு வீராங்கனை

1986 – ஒலிவியர் ஜிரூட், பிரான்சியக் கால்பந்தாட்ட வீரர்

1986 – மார்ட்டின் கப்டில், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

420 – ஜெரோம், உரோமானியப் புனிதர் (பி. 347)

1897 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியப் புனிதர் (பி. 1873)

1974 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர், கவிஞர் (பி. 1898)

1985 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1900)

2001 – மாதவ்ராவ் சிந்தியா, இந்திய, மத்தியப் பிரதேச அரசியல்வாதி (பி. 1945)

2004 – காமினி பொன்சேகா, சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1936)

2008 – ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)

2010 – சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர்

2011 – ரால்ஃப் ஸ்டைன்மன், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1943)

2015 – கு. திருப்பதி, தமிழக அரசியல்வாதி (பி. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (போட்சுவானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1966)

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்

Categories

Tech |