எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் உராய்வு காரணமாக ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகண்ட் ஆயிலை மறுசுழற்சி செய்து கிராபீன் என்ற புதிய பொருளை உருவாக்கி ஐஐடி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பொதுவாக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இந்தியன் மற்றும் பிற பகுதிகளில் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது இந்த ஆயில் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை மிக குறைந்த விலையில் வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நிறுவனம்தான் அதாவது வாயிலில் இருந்து நுண்ணிய துகள்களை பிரித்து எடுத்து அதன்மூலம் கிராபின் என்ற பொருளை ஐஐடி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
நாம் அனைவரும் பென்சிலில் பயன்படுத்தக்கூடிய கிராபைட் என்ற பொருளில் உள்ள பிரித்தால் கிராபின் பொருள் கிடைக்கும் இந்த கிராபின் பொருட்கள் விமானத்தை தயாரிக்க பயன்படுகின்றன. முந்தைய காலகட்டங்களில் விமானங்கள் அலுமினியத்தின் மூலம் செய்யப்பட்ட பின் விமானத்தின் எடையை குறைப்பதற்காக பிளாஸ்டிக்கால் செய்ய முற்பட்ட போது பிளாஸ்டிக்கில் மின்னல் தாக்கினால் விமானம் விபத்துக்குள்ளாகும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக்கில் கிராபின் கலந்து விமானம் தயாரித்தனர்.
இதன் மூலம் மின்னல் தாக்கும் பொழுது கிராபின் மின்சாரத்தை எளிதாக கடந்து விடும். மேலும் இந்த கிராபின் பொருட்களை நாம் பயன்படுத்தும் செல்போனில் சிலிகான் பயன்படுத்துவதற்கு பதிலாக பயன்படுத்தினால் செல்போன் மிக வேகமாக இயங்கும். இந்நிலையில் இது குறித்து பேசிய ஐஐடி நிறுவனத்தின் உதவி ஆசிரியர்,பழைய ஆயிலில் இருந்து நுண்ணிய துகளை பிரித்தெடுத்து கிராபீன் என்ற பொருளை உருவாக்கி பல்வேறு ஆராய்ச்சிகளை விரிவாக மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இதற்கான வெற்றிகளை அடைவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.