Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் ஊர்வலம் ஆரம்பம்…. ஆய்வு செய்த பார்வையாளர்…. ஆட்சியரின் செயல்….!!

விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜப்பேட்டை பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 100% நேர்மையாக வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் சுய உதவி குழு சார்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நாள் குறித்த வரைபடத்தையும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை பல வண்ணங்களில் கோலங்களாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தல்களில் 100% வாக்களிப்பது குறித்த உறுதி மொழியினை சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் முன்னிலையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அதன்பின் கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் சாந்தா வாக்கு எண்ணும் மையமான ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கும் முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |