பெண் வேட்பாளர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு இந்திராணி, மங்கை, ஆதிலட்சுமி ஆகிய 3 பேரும் போட்டிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திராணி கால் வலி அதிகம் ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அதன்பின் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.