நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதிகார பதவி கிடைத்து மதிப்பு மரியாதை கூடும். இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது, அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியை தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் நல்லபடியாகவே உங்களை வந்து சேரும். நீங்கள் ஆசைப்பட்ட பொருளை இன்று நீங்கள் வாங்க கூடும். சில நேரங்களில் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நெடுநாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். இலட்சியங்களும் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானத்தை மட்டும் எப்போதும் கைவிட்டு விடாதீர்கள். பெண்கள் வாழ்வில் குதுகலம் இருக்கும்.
இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட மனம் கொஞ்சம் இயங்கும். எச்சரிக்கையாக இருங்கள். பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து வித காரியம் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குவதால் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். தயவு செய்து இதை செய்வதற்கு முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
ரிஷபம் :
சிந்தனையின் சொற்பமாக விளங்கக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரித்து தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு பிறக்கும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு இன்று சுகபோக வாழ்வு கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் விலகிச் செல்லும். எந்த தடையும் இன்று இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிகமாக முயற்சி செய்து முடிக்க வேண்டியிருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதோ தீயில் வேலை செய்பவராகவோ இருந்தால் கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்து மனம் மகிழ்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும்.
இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணமும் மேலோங்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். தயவுசெய்து ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக தான் பேச வேண்டும். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடைய அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விதமான காரியங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் முடிந்தால் நீங்கள் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் :
அதீத உடல் கவர்ச்சி கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும். ஆடை, ஆபரணங்கள், அலங்கார பொருட்கள் சேரும். அழகாக உடை அணிந்து மகிழ்வீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். அதுபோலவே இன்று பொறுப்புகளும் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சாதிப்பீ ர்கள். வெளியூர் பயணங்கள் வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும்.
இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சக மாணவர்களிடம் மட்டும் ஒற்றுமையை பேணுவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். நீங்களும் மன மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
கடகம் :
கவர்ச்சியான கண்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகத்தான் இருக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். இன்று எந்த விஷயங்களிலும் முடிவெடுக்கும்போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உங்களுக்கு கிடைப்பது தாமதமாகத்தான் கிடைக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைகொடுக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதனால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு தான் முன்னேற்றம் பெற முடியும். கொஞ்சம் கவனமாக பாடங்களைப் படியுங்கள். அதுபோலவே விளையாட்டு ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது, முக்கியமான பணியை செய்யும் பொழுதோ நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கி உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக திகழும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
சிம்மம் :
தெளிவான சிந்தனையும் ஆரோக்கியமான மனநிலையும் கொண்ட சிம்மராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவை படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் நீங்கள் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுகளை பெறாது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்பொழுதும் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடித்துவிடுவீர்கள். வீண் செலவு மட்டும் இருக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திட்டமிடுவதில் பின்னடைவு கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோரின் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை அதிகமாக இருக்கும். தெய்வத்திற்காக சிறு தொகை செலவிட க்கூடும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்தைச் செய்யும் போதும் ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானம் வழங்கினால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
கன்னி :
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கன்னிராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் துறையினருக்கு உதவிகள் கிடைத்து தொழில் சிறக்கும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுங்கள்.
இன்று பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். நிதானமாக வேலை செய்யுங்கள். இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் முக்கியமான காரியத்தை செய்யும்போதோ, முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். அனைத்து விதமான காரியம் நல்லபடியாக நடக்கும். தயிர் சாதத்தை தானமாக வழங்கினால் கர்ம தோஷங்களில் இருந்து விடுபட்டு செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
துலாம் :
அழகான உடல் தோற்றத்தையும் அன்பான உள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நட்பும் வட்டம் விரிவடைந்து நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மட்டும் நல்லது. வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் வைப்பது நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
அக்கம் பக்கத்தினரிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி இன்று சமூகத்தில் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதாவது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்
விருச்சிகம் :
சுறுசுறுப்பாக காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரிய கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியவர் மூலம் அனுகூலமும் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் நல்லபடியாகவே இருக்கும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று தெளிவான சிந்தனையுடன் அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் நீங்கள் மனதில் நினைத்த அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை நீங்கள் செல்வவளம் ஆக மாற்றிக்கொள்ளலாம். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்
தனுசு :
கடுமையாக உழைக்க கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு நடைமுறை சிக்கல்கள் கொஞ்சம் கவலையை கொடுப்பதாக இருக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். உங்களுடைய நேர்மையான எண்ணத்தால் பலரும் தட்டிகழிக்கப்படுவார்கள்.அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். மன திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்களை பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.
மனதிற்கு பிடித்த -வர்களை சந்திக்க நேரிடும். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது மட்டும் நல்லது. ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். ரகசியங்களை கையாளும்போது மட்டும் தனி கவனம் உங்களுக்கு வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோல இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் செல்வ செழிப்போடு வாழலாம். இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மகரம் :
மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய மகர ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமான அதிகாரிகளின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நிறைவேறி ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று அனைத்து விஷயங்களையும் சாதகமாக பயன்படுத்தி முன்னேறி செல்வீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மன திருப்தியுடன் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உறவினர் வகையில் உதவிகளும் கிடைக்கும். இன்று நீங்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பான பெயர் எடுப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்.
உங்களுடைய செல்வாக்கும் உயரும். அனைத்து விஷயங்களையுமே இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். இன்று தன வரவு தாராளமாக இருக்கும். பணத்தை மட்டும் மற்றவர்கள் பார்வையில் படும் படி எண்ண வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினர் உடன் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று உடனிருப்பவர்களே உங்களுக்கு சிறு தொல்லை கொடுக்கக் கூடும். ஆகையால் அதிலும் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் செல்வ செழிப்பை சந்திக்கக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்
கும்பம் :
எப்பொழுதுமே மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவின் கழகத்தால் உறவில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி பணிவாக நடந்தால் ஆதாயத்தை பெறலாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களை கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். எல்லா வகையிலுமே நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து எடுப்பது மட்டும் நல்லது. முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி சிறப்பாக வாழ்க்கை வாழ்வீர்கள். தயவுசெய்து இதை மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்
மீனம் :
உயர்வான எண்ணம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரம் சம்பந்தமாக அதிகாரிகளின் சந்திப்பு இனிதாக அமையாது. உடல்நிலையில் கவனம் வேண்டும். வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும். எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருக்கும். இப்படி நடந்து விடுமோ அல்லது அப்படி நடந்து விடுமோ என்று மனதில் தேவையில்லாத குழப்பம் பயம் இருந்து கொண்டே இருக்கும். இன்றும் மற்றவர்களுடைய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். இன்று தேவையான உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் இருக்கட்டும். லாபம் இன்று உயரும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். அதற்காக எந்த ஒரு விஷயத்திற்கும் நீங்கள் பயப்படாதீர்கள். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கலைத் தவிர்க்கலாம். சின்ன சின்ன செலவுகளை சந்திக்க நேரிடும்.
உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்பொழுதும் போலவே மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். மன தைரியத்தால் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள். ஆகையால் இன்று நீங்கள் பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான பணியை செய்யும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய வாழ்க்கையில் செல்வம் வந்து சேரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்